திங்கள், 18 ஜூலை, 2016

##தலைவரா?வில்லனா??
பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர்..!!!
##நான் பதவிக்கு வந்தால் – இந்த அயோக்கியர்கள்
அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன் –
அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன்..
ஆயிரம் பேராகட்டும், பத்தாயிரம் பேராகட்டும் எனக்கு
கவலை இல்லை ”
##என்று தேர்தலின் போதே வெளிப்படையாக கூறி,
பலமடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுஅதிபர் ##பதவிக்கு வந்தஅடுத்த 24 மணி நேரத்தில் 110 போதை மருந்து
விற்பனை யாளர்களை சுட்டுத்தள்ளியதன் விளைவு
##ஆயிரக்கணக்கான ரவுடிகளும், போதைமருந்து
வியாபாரிகளும் – இரண்டு கைகளையும்
தூக்கிக்கொண்டு போய் காணும் இடங்களில் எல்லாம்
போலீசிடமும், ராணுவத்திடமும் சரணடைகிறார்கள்…!!!
##வித்தியாசமான ஒரு தலைவர் – பிலிப்பைன்ஸ்நாட்டின்
புதிய ஜனாதிபதியாக ஜூலை 1-ந்தேதி பதவியேற்ற
ரோட்ரிகோ டுடேர்தே….!!! ( Rodrigo Duterte )
##பொருளாதாரம் பற்றி எனக்குத் தெரியாது…
இந்த நாட்டின் அறிஞர்களும், பொருளாதார நிபுணர்களும்
அடங்கிய குழுவிடம் அந்த பொறுப்பை விட்டு விடுவேன்
###என்பொறுப்பு லஞ்சம், கொலை, கொள்ளை, போதை
மருந்து விற்பனை – ஆகியவற்றை அடியோடு ஒழித்து
பெண்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய ஒரு பத்திரமான
நாட்டை உருவாகுவதே.

போதை மருந்தை உற்பத்தி செய்பவர்கள்,
விற்பனை செய்பவர்கள் –
பயன்படுத்துபவர்கள்
அத்தனை பேருக்கும் நான் எமனாக இருப்பேன்….

சட்டமன்றங்களோ,
மனித உரிமை அமைப்புகளோ என்ன சொன்னாலும்
அதை நான் பொருட்படுத்தப்போவதில்லை. மக்கள்
எனக்கு அளிக்கும் ஆறு ஆண்டுக்கால அவகாசத்தில்
முதல் ஆறு மாதத்திலேயே, பிலிப்பைன்ஸ் நாட்டை
உலகிலேயே அமைதியான, பத்திரமான இடமாக்குவதே
என் லட்சியம்….!!! ”

அவரது இந்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டு தான்
பிலிப்பைன்ஸ் மக்கள் தங்கள் ஜனாதிபதியாக
டுடேர்தே-யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இந்த டுடேர்தையை அவரது மக்கள் எப்படி
புரிந்து கொண்டார்கள்…?

கேட்கவே வித்தியாசமாக இருக்கும் அவரது பின்னணி –
நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள
வேண்டிய ஒன்று..
71 வயதாகும் டுடெர்தே, பிலிப்பைன்ஸில் –
நாட்டுப்புறத்தில், எளிய குடும்பத்தில் பிறந்தவர்.
தட்டுத்தடுமாறி, உருண்டு புரண்டு – எப்படியோ
ஒரு வக்கீல் பட்டம் பெறும் அளவிற்கு படித்து விட்டார்.

5-6 ஆண்டுகள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்,
பின்னர் அரசியலில் நுழைந்தார். தனது ஏரியாவான
மின்டனாவோ-வில், Davao என்கிற ஊரின் மேயராகப்
பொறுப்பேற்றார். மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும்
அந்த ஊர் மக்களால் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
டுடெர்தே, 22 ஆண்டுகளுக்கு அவரது மக்களால் விரும்பி
தேர்ந்தெடுக்கப்பட்டு மேயர் பதவியில் இருந்தார்.

போதை மருந்து வியாபாரிகளும், சூதாட்ட கிடங்குகளும்,
ரவுடிகளுமாக நிறைந்திருந்த ஊரை சுத்தம் செய்ய
ஆரம்பித்தார். குறி பார்த்து சுடக்கூடிய ஷார்ப் ஷூட்டர்களை
தன் காவல் படையில் சேர்த்துக் கொண்டார். பல சமயம்
அவரே தனது மோட்டார் பைக்கில், இரவு நேரங்களில்
ரோந்து வருவார். கண்ணில் படும் போதை வியாபாரிகள்,
ரவுடிகள் அனைவரும் குறி பார்த்து சுடப்பட்டு
கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நடுத்தெருவில்
வேட்டையாடப்பட்டனர். தப்பிக்க முயன்றவர்கள்,
பிடிபட்ட பிறகு நரக வேதனைக்கு உள்ளாயினர்.

அவரது பதவிக்காலத்தில் சுமார்
1400 பேர் என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விளைவு – ஊர் சுத்தமாகியது. டுடெர்தேயின் புகழ்
பிலிப்பைன்ஸ் நாடு முழுவதும் பரவியது…!!!

உலகிலேயே பத்திரமான ஊர்களில் 4வது இடமாக
மின்டனாவோ-Davao நகரம் பெயர் பெற்றது.

சொந்த ஊரில் அவர் நிகழ்த்திய சாதனைகளின்
விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டின்
மத்திய அரசில் அமைச்சராக சேரும்படி
அவருக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது.
குறைந்த பட்சம் 4 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்தகைய
அழைப்புகளை நிராகரித்தார் டுடெர்தே.

இறுதியில், என்ன தோன்றியதோ தெரியவில்லை –
கடந்த ஆண்டு 2015-ல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில்
தான் நிற்கப்போவதாக அறிவித்தார்…

அவரது அறிவிப்பை கேட்டதுமே பிலிப்பைன்ஸ் நாடே
பரபரப்பினால் பற்றிக் கொண்டது. கருப்பு சந்தைக்காரர்கள்,
லஞ்ச ஊழல் சக்கரவர்த்திகள், அரசியல்வாதிகளின்
பின்னால் நிற்கும் ஊடகங்கள் – அத்தனையும் அவரின்
நெகடிவ் பக்கத்தை விரிவாக்கி காண்பித்தன –
மக்களை பயமுருத்தின…

டுடெர்தே சட்டத்தை மதிக்க மாட்டார்…
நீதிமன்றங்களை மதிக்க மாட்டார்…
சட்டவிரோதமான கொலைகள் நிகழும் ….
மனித உரிமைகள் நசுக்கப்படும் –
என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

தன் பங்குக்கு டுதெர்தே – நேரிடையாகவே இதை
உறுதிசெய்வது போல் பேசினார்….ஆறு மாதங்களில்
அத்தனை கொடியவர்களும் சுட்டுக் கொல்லப்படுவார்கள்…
அவர்கள் பிணங்கள் சமுத்திரத்தில் விட்டுக் கடாசப்படும்
என்றெல்லாம் பேசினார்….

பரபரப்பாக நிகழ்ந்த தேர்தலின் முடிவில் –
எதிர் வேட்பாளரான அன்றைய ஜனாதிபதியை விட
இரண்டு மடங்கு ஓட்டு பெற்று வெற்றி பெற்றார்
டுடெர்தே….

ஜூலை 1 – பதவி ஏற்றார் –
முதல் தகவல் – 110 போதை மருந்து விற்பனையாளர்கள்
சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான போதை மருந்து விற்பனையாளர்களும்,
ரவுடிகளும், முன்னாள் குற்றவாளிகளும் –
போலீசில் சரணடந்தனர்….

இன்னமும் கணக்கெடுப்பு முடியவில்லை….
கவலைப்படாமல் சுடுங்கள் –
நாட்டை சுத்தம் செய்யுங்கள் –
உங்கள் செயலின் விளைவுகளுக்கு
நான் பொறுப்பேற்கிறேன்…என்று
காவல் படைக்கும், ராணுவத்திற்கும்
உறுதி அளித்திருக்கிறார் டுடெர்தே…!

வழக்கமாக ஆடம்பரமாக நடைபெறும் ஜனாதிபதியின்
பதவியேற்பு விழா – இந்த முறை வித்தியாசமாக
வெகு எளிமையாக நடந்தது. வெறும் 600 பேர் மட்டுமே
பங்கேற்ற விருந்தில், மது பரிமாற்றம் கிடையாது.
மிகச்சாதாரணமான மெனு.

டுடெர்தே – மிக எளிமையாகவே உடையணிபவர்.
பதவியேற்பின் போதும் – ஜனாதிபதிக்கான பாரம்பரிய
எம்பிராய்டரி உடை, டை – ஒன்றுமே கிடையாது.

ஜனாதிபதிக்குரிய புல்லெட் ப்ரூப் காரோ, காவலர்களோ
தனக்கு தேவையில்லை என்று கூறி விட்டாராம்.
ஒரு சாதாரண பிக்கப் வேன் தனக்கு போதுமானது
என்று கூறி விட்டார்….

பிலிப்பைன்ஸ் பொருளாதார ரீதியாக வளர்ச்சி
அடைந்து கொண்டிருந்தாலும் கூட, அந்த வளர்ச்சியின்
பலன் ஒரு சில செல்வந்தர் குடும்பங்களையே
சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையை நான்
அனுமதிக்கப்போவதில்லை. நாட்டின் வளர்ச்சியின் பலன்
அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.
நாட்டின் செல்வங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட
வேண்டும். ஊர்ப்புறங்களில் நிறைய வேலை வாய்ப்புகள்
உருவாக்கப்பட வேண்டும் – இதெல்லாம் டுடெர்தே-யின்
கனவுகள்….
##பிலிப்பைன்ஸின் எதிர்காலம் – நாம் ஆவலுடன்
உற்று கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கும்.
( நம்ம ஊரில்  டுடெர்தே மாதிரி
யாராவது உருவாக வாய்ப்பு உண்டா…?…..

ஞாயிறு, 17 ஜூலை, 2016

அதிர்ச்சியளிக்கும் தகவல்

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!

இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி”.

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.

இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.

ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.

அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.

போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.

அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா?

பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்?

செய்கூலி கேட்பது நியாயம் தான்.

16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?

இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?

அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?

பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.

கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.

இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.

அல்லது திருத்தப்படவேண்டும்.

‪#‎ரஜினிக்கு_ஜால்ராப்போடும்_நீதிமன்றம்‬
‪#‎தமிழர்களை_வேட்டையாடும்_கபாலி‬
ரஜினி படத்தை வெளியிட வாய்ப்புள்ள 225இணையதளங்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணக்காரன்,அரசியல்வாதி,பார்ப்பான்,
மாபியாக்கும்பல்,கிரிமினல்கள் பணமெறிந்தால் தீயாக வேலை செய்யும் நீதிமன்றம் தொழிலாளர்,ஏழைகள் பிரச்சனை என்றால் 10வருடமாக வழக்கை இழுத்தடிக்கும்.
ஒரு வியாபாரி நட்டமடையக்கூடாது என்பதற்காக விரைந்து முடிவெடுக்கும் நீதிமன்றம், அதே ரஜினி படத்துக்கு அரசு, காவல்துறை உதவியுடன் 70ரூ,100ரூ டிக்கெட்டை 500க்கும் 1000க்கும் விற்பனை செய்து கொள்ளையடிப்பதைப் பற்றி கேள்வி எழுப்பாததேன்?
உணவிலே கலப்படத்துக்கு புகார் செய்யும் போது,அணுஉலைக்கெதிராக புகார் செய்யும் போது, பழங்குடியினரை விரட்டி நிலத்தை பிடுங்குவதற்கெதிராக
புகார் தரும்போது காதில் பஞ்சை வைத்தபடி நடிக்கும் நீதிமன்றம்தான்
காரியக்கிறுக்கனும் இந்துத்தவா வாதியுமான ரஜினி புகாருக்கு புயலாகக வேலை செய்கிறது.
திரையரங்கில் அரசின் அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கு விற்பனை செய்யாத கபாலி படத்தை திருட்டுசிடி, இணையத்தில்தான் பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அரசின் அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கு விற்காத கபாலிபடத்தின் கொள்ளையை கண்டிக்காத நீதிமன்றம் இணையத்தில் வெளியிடுவதை மட்டும் தடுக்கும் அதன் வர்க்கப்பாசத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
இது ஒருபுறமென்றால் ரஜினிக்காக மார்க்கெட் செய்யும் ஊடகவிபச்சாரம் அதைவிட சகிக்க முடியாததாயிருக்கிறது
ரஜினி எப்போது வருவார், கபாலி எப்போது ரிலீஸ், உடல்நிலை சரியில்லையா? மகள் ரஜினியுடன் இருக்கிறாரா? படத்தின் கதையென்ன?
அதற்கொரு தலித் ஒளிவட்டம், பாட்டு உருவான விதம், என ஊடகங்கள் ரஜினியின் கக்கூஸ்வரை போய் கண்டறிந்து வெளியிடும் புலனாய்வு திறன் இருக்கிறதே
த்தூ பல்லிளிக்கும் ஊடகவிபச்சாரம்
அரசபயங்கரவாதம் காஷ்மீரையோ, காந்தமாலையோ, ஆதிவாசிகளை வேட்டையாடுவதையோ இப்படி செய்தியாகத் தராத ஊடகம் கபாலிக்கு காவடி தூக்குகிறது.
நீதிமன்றமும் தனதுபங்குக்கு ஜால்ரா அடிக்கிறது

புதன், 13 ஜூலை, 2016

*தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும், தெரியாததும்*

👉🏽தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.
👉🏽தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.
👉🏽தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 ச.கி.மீ.
👉🏽மொத்த காவல் பணியாளர்கள் – 113602..
👉🏽தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4.
தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of
Police) தலைமையில் இயங்குகின்றன.

👉🏽தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆணையரகம் – 6.
தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.

👉🏽தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட).
தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன.
இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.

👉🏽போலீஸ் துணை பிரிவுகள் – 247.
👉🏽போக்குவரத்துக் காவல் நிலையங்கள் – 218.
👉🏽திருச்சி ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 20.
👉🏽சென்னை ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 21.
👉🏽தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1 காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.

முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது.

தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.

*காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்*

1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order).
2] ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police).
3] பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards).
4] பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID).
5] கடலோர காவல் துறை (Coastal Security Group).
6] குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID).
7] பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing).
8] செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School).
9] இரயில்வே காவல்துறை (Railways)
10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security).
11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
12] மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing).
13] குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights).
14] பயிற்சிப் பிரிவு (Training).
15] சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights).
16] போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic).

*பயிற்சி நிறுவனங்கள்:*
அ) போலீஸ் அகாடமி – 1.
ஆ) Regl. போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம். – 1.
இ) போலீஸ் பயிற்சி பள்ளி (நிரந்தரம்) – 8 (தூத்துக்குடி / திருச்சி / வேலூர் / கோயம்புத்தூர் / ஆவடி /விழுப்புரம் / சேலம் / மதுரை).
ஈ) போலீஸ் பயிற்சி கல்லூரி – அசோக் நகர்.

*தமிழ்நாடு காவல் துறையில் பணி புரிபவர்களின் ஊதிய விவரம்:*

1] காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) – 80,000.
2] காவல்துறைத் துணை தலைமை இயக்குனர் (ADGP) – 67000 – 79000.
3] காவல்துறை பொது ஆய்வாளர் ( Inspector General of Police ) – 37400- 67000 + 10000.
4] காவல்துறை துணை பொது ஆய்வாளர் ( Deputy Inspector General of Police ) – 37400 – 67000 + 8900.
5] காவல்துறை ஆணையர் ( Commissioners of Police ) – 37400 – 67000 + 12000.
6] காவல்துறைக் கண்காணிப்பாளர், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ( SPs, IPS including Asst. Inspector, Jt. SP, Addl. SP ) – 15600 – 39100 + 6600.
7] காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) – 15600 – 39100 + 5400.
8] காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) – 15600 – 39100 + 7600.
9] ஆய்வாளர் (Inspector) – 9300 – 34800 + 4900.
10] உதவி ஆய்வாளர் (சப் – இன்ஸ்பெக்டர் – பெண் அதிகாரிகள் உட்பட ) – 9300 – 34800 + 4800.
11] தலைமைக் காவலர் (Head Constable including Women HC ) 5200 – 20200 + 2800.
12] முதல்நிலைக் காவலர் (PC-I) ( Police Constable Gr-I incl. Women PC ) – 5200 – 20200 + 2400.
13] இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) ( Police Constable Gr-II including women ) – 5200 – 20200 + 1900.

*உலகின் 10 மிகப்பெரிய போலீஸ் படைகள்:*

1. சீனா – 1,600,000 போலீஸ் அதிகாரிகள்
2. இந்தியா – 1,585,353 போலீஸ் அதிகாரிகள்
3. அமெரிக்கா: 794, 300 போலீஸ் அதிகாரிகள்.
4. ரஷ்யா – 782,001 போலீஸ் அதிகாரிகள்.
5. இந்தோனேஷியா: 579, 000 போலீஸ் அதிகாரிகள்
6. மெக்ஸிக்கோ: 544, 000 போலீஸ் அதிகாரிகள்
7. பிரேசில்: 478, 001 போலீஸ் அதிகாரிகள்
8. துருக்கி: 412, 624 போலீஸ் அதிகாரிகள்
9. நைஜீரியா: 371, 800 போலீஸ் அதிகாரிகள்
10. பாக்கிஸ்தான்: 354, 221 போலீஸ் அதிகாரிகள்.

*கடலோர பாதுகாப்பு காவல் துறையினர்:*

13591 மீன் பிடிக்கும் கிராமங்கள் அடங்கிய கடலோர மாவட்டங்கள்
6 மண்டல அலுவலகங்கள் (சென்னை / நாகை / வேதாரண்யம் / புதுக்கோட்டை / ராமநாதபுரம் / தூத்துக்குடி).

*கடலோர பாதுகாப்பு காவல் குழு உபயோகிக்கும் வாகனங்கள்:*

12 படகுகள் (12 டன்) – 12 படகுகள் (5 டன்).
8 திடமான ஊதப்பட்ட படகுகள்
6 ஜெமினி படகுகள்.
12 அனைத்து நிலப்பரப்பு ஜீப்புகள்,
12 அனைத்து நிலப்பரப்பு இருசக்கர வாகனங்கள்.
20 படகுகள்,
30 நான்கு சக்கர வாகனங்கள்,
60 இரு சக்கர வாகனங்கள்.

*தமிழ்நாடு காவல் துறையில் மோப்ப நாய்கள்:*

👉🏽குற்றம் கண்டு பிடிப்பதில் – 80 மோப்ப நாய்கள்.
👉🏽வெடித்துச் சிதறும் கண்டறிதலில் – 107 மோப்ப நாய்கள்.
👉🏽போதைப் பொருள் பற்றி கண்டறிய  – 4 மோப்ப நாய்கள் உள்ளன.
👉🏽மலைக்குன்றுகள் உள்ள இடத்தில் பணி புரிய 4 (சென்னை / மதுரை / கோயம்புத்தூர் / திருச்சி) 38 குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
👉🏽மாநில போக்குவரத்துகளை திட்டமிட்டு சரிசெய்ய – 122 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ( ஜிபிஎஸ் மூலம் ) உள்ளன.

*தமிழ்நாடு பற்றிய விவரங்கள்: வருவாய் நிர்வாகம் (2010-11):*

1. வருவாய் மாவட்டங்கள் – 32.
2. வருவாய் கோட்டங்கள் – 76.
3. தாலுகா – 220.
4. உள்வட்டங்கள் – 1,127.
5. வருவாய் கிராமங்கள் – 16564.
6. கடலோர மாவட்டங்கள் – (2007-08) – 13.
உள்ளாட்சி அமைப்புகள் (2010-11):
1. மாநகராட்சிகள் – 12.
2. நகராட்சிகள் – 150.
3. ஊராட்சி ஒன்றியங்கள் – 385.
4. டவுன் பஞ்சாயத்துகள் – 559.
5. மாவட்டம் – 32.
6. கிராம ஊராட்சிகள் (RD ஊராட்சிகள் கொள்கை விளக்கக் குறிப்பு படி 2011-12) – 12524.
7. குக்கிராமங்கள் – 48452 (தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை படி).

*சட்டமன்றம் :*
👉🏽சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் – 234 + 1 (நியமனம் - ஆங்கிலோ – இந்திய உறுப்பினர் ).
👉🏽பாராளுமன்ற (மக்களவை உறுப்பினர் – 39 & மாநிலங்களவை உறுப்பினர் – 18).

*சாலைகள் நீளம் :*
👉🏽தேசிய நெடுஞ்சாலைகள் – 4,861.000 கி.மீ தொலைவு.
👉🏽மாநில நெடுஞ்சாலைகள் – 56,814.200 கி.மீ தொலைவு.
👉🏽கார்ப்பரேஷன் மற்றும் நகராட்சி சாலைகள் – 18,704.471 கி.மீ தொலைவு.
👉🏽பஞ்சாயத்து யூனியன் மற்றும் கிராம ஊராட்சி சாலைகள்- 173,153.436 கி.மீ தொலைவு.
👉🏽டவுன் பஞ்சாயத்து சாலைகள் – 19,151.753 கி.மீ தொலைவு.
👉🏽மற்றவை (Forest Road) – 3,342.423 கி.மீ தொலைவு.
👉🏽கடலோர வரி – 1,076 கிலோ நீளம்.
👉🏽ரயில்வேஸ்: பாதை நீளம் – 3880,90 கி.மீ தொலைவு.